இந்திய- நேபாள எல்லையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக 557 எல்லைக் கம்பங்கள் காணாமல்போயுள்ளதாகவும் நேபாளக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிராஹா, சப்தாரி, சன்சாரி, முராங், ஜாபா ஆகிய மாவட்டங்களில் 1,665 எல்லைக் கம்பங்கள் உள்ளதாக நேபாள அளவீட்டுத் (சர்வே) துறை தெரிவிக்கிறது. ஆனால், ஆயுதக் காவல் படையினர் அண்மையில் நடத்திய ஆய்வில் 1,108 கம்பங்கள் மட்டுமே இருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் 557 எல்லைக் கம்பங்கள் காணாமல்போயுள்ளன.
இதற்கு ஆக்கிரமிப்பு, ஆறுகளில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் கரை அரிப்பு, எல்லைப் பிரச்சனை தொடர்பாக உள்ளூர் மக்களிடம் உள்ள விழிப்புணர்வுப் பற்றாக்குறை ஆகியவைதான் முக்கியக் காரணம் என்று காவலர்கள் கூறுயுள்ளனர்.