ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தலில் யாரும் பங்கேற்க வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட்ட காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கைது செய்யப்பட்டார்.
ஜம்மு- காஷ்மீரில் வரும் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 24 வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் யாரும் பங்கேற்க வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட்ட காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் யாசர் மாலிக் கைது செய்யப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக எங்களை சிறையில் தள்ளுவதால் எங்கள் உணர்வுகளை அழிக்க முடியாது என்றார்.
கடந்த நான்கு மாதங்களாக அறவழியில் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம் என்று கூறிய யாசர் மாலிக், மக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மேலும் எங்கள் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகரூப், தேர்தலில் நாங்கள் பங்கு பெறுவோம் என்று கூறியுள்ளார்.