அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வில் இதுவரை 81 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காயம் அடைந்த 400க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த குண்டுவெடிப்பில் வேறு நாடுகள் ஏதாவது சம்பந்தப்பட்டு இருக்கிறதா என்பதை பற்றி தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் மாநில முதலமைச்சர் தருண்கோகேயுடன், பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.