மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியை தொடங்கி, கடந்த 40 ஆண்டுகளாக நடத்தி வருபவர் பால் தாக்கரே. 84 வயதான இவர் தன்னை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி, ஓய்வு எடுக்க அனுமதிக்கும்படி கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி ஏடான 'சாம்னா'வில் முதல் பக்கத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்து இருக்கிறார்.
''கட்சிப் பணிகளை புதிய தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைத்த பிறகு என்னை எதற்காக நீங்கள் (தொண்டர்கள்) சந்திக்க விரும்புகிறீர்கள்? உத்தவ் தாக்கரேவை சந்தித்த பிறகு என்னையும் ஏராளமான தொண்டர்கள் சந்திக்க வருவதால் நான் மிகவும் களைப்படைந்து விடுகிறேன்.
ஆகவே கட்சிப் பணிகள் தொடர்பாக தலைவர் உத்தவ் தாக்கரேவை மட்டும் சந்தியுங்கள். எனக்கு ஓய்வு கொடுங்கள்'' என்று அந்த வேண்டுகோளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிப் பணிகள் மற்றும் அரசியலில் இருந்து பால்தாக்கரே விலக விரும்புவதையே இப்படி சூசகமாக அவர் தெரிவித்து இருப்பதாக கருதப்படுகிறது.