சத்தீஷ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று காலை மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிறப்பு அயுதப் படைக் காவலர்கள் 11 பேர் காயமடைந்தனர்.
சாலைத் திறப்பு விழா பாதுகாப்புப் பணிகளிற்காகச் சென்று கொண்டிருந்த சத்தீஷ்கர் மாநிலச் சிறப்புக் காவல் படையினரின் வாகனத்தைக் குறி வைத்து, நாராயண்பூர்- கொண்டகான் சாலையில் பெனூர் காவல் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பஸ்தார் சரக காவல்துறை தலைமை ஆய்வாளர் கே.என்.உபாத்யாய தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் 11 காவலர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், கண்ணிவெடியில் சிக்கிக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காவலர்களின் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறினார்.