பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறி விட்டது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குற்றம்சாற்றியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் தீவிரவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் இந்த தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது என்றும் குற்றம்சாற்றினார்.
அசாமில் தொடர் குண்டுவெடிப்புக்கு வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியுள்ள தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என்று கூறிய அத்வானி, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் மத்திய அரசு தோற்றுவிட்டது என்று குறை கூறினார்.
தேசிய சூழல் நாளுக்கு நான் மோசம் அடைந்து வருகிறது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் அடியோடு ஒடுக்கப்படும் என்றும் அத்வானி கூறினார்.