அசாம் மாநிலத்தில் இன்று காலை 13 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர். 470 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் கவுகாத்தி நகரில் 4 குண்டு வெடிப்பும், பார்பேட்டா மாவட்டத்தில் 3 குண்டுவெடிப்பும், கோக்ராஜ்கர் மாவட்டத்தில் 2 குண்டு வெடிப்பும் நிகழ்ந்தன.
தலைநகர் குவகாத்தியில் வெடித்த 4 குண்டுகளும் மிக, மிக சக்தி வாய்ந்தவை. இந்த 4 குண்டு வெடிப்புகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
மார்க்கெட்டுக்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் மற்ற மார்க்கெட் பகுதிகளில் காவல்துறையினர் எச்சரிக்கை செய்து உஷார் படுத்தினார்கள். இதன் காரணமாக தலைநகர் குவகாத்தி முழுவதும் மக்களிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்பை திரிபுராபுலிப்படையுடன் சேர்ந்து உல்பா தீவிரவாதிகள் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
மிக மிக திட்டமிட்டு 20க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் குண்டுகளை வைத்துள்ளனர். இதில் குவகாத்தியில் வைக்கப்பட்ட 4 குண்டுகளும் ஆர்.டி.எக்ஸ் கலவையால் செய்யப்பட்டவை.
இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அசாம் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.