Publish Date: Thu, 30 Oct 2008 (12:41 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (12:41 IST)
அஸ்ஸாமின் முக்கிய நகரான குவஹாட்டி மற்றும் அப்பர் அஸ்ஸாம் பகுதிகளில் அடுத்து குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவஹாட்டியில் அமைந்துள்ள திஸ்பூர் சாலை, கணேஷ்கிரி, பான் பஜார் ஆகிய இடங்களிலும், அப்பர் அஸ்ஸாமின் பர்பேட்டா, போபைகான் மற்றும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்திலும் மொத்தம் 12 குண்டுகள் வெடித்ததாக தொலைக்காட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை அனைத்தும் அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புகள் என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 50ஐ தாண்டியுள்ளது. எனினும், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மதியம் 12.15 மணியளவில் துவங்கி அடுத்த சில நிமிடங்களில் 15 குண்டுகள் அடுத்தடுத்து வெடிக்கப்பட்டுள்ளது அம்மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பலி எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Webdunia
Publish Date: Thu, 30 Oct 2008 (12:41 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (12:41 IST)