Publish Date: Thu, 30 Oct 2008 (00:04 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (00:03 IST)
வட இந்தியர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசும் மராட்டிய அரசும் வட இந்தியர்கள் மீது நடைபெறும் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இந்த சம்பவங்களுக்கு இரு அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மாராட்டிய முதலமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் இது குறித்து கடிதம் எழுதி உள்ளேன் என்று மாயாவதி மேலும் கூறினார்.
இதனிடையே உயிர் இழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியை மாயாவதி வழங்கினார்.