பத்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது கடினமாக இருக்கும் என்று சமாஜ்வாடி கட்சியின் பொது செயலர் அமர்சிங் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம் என்றும் நீதி விசாரணைக்கு அவர் உத்தரவிடுவார் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.
மராட்டியத்தில், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறிய அமர்சிங், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல், மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால், டெல்லி, பீகார், உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமர்சிங் கூறினார்.