Publish Date: Wed, 29 Oct 2008 (01:46 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (01:45 IST)
ராஞ்சியில் மும்பை ரயிலுக்கு மர்ம கும்பல் ஒன்று தீ வைத்தது. ஆனால் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
ஹாடியா சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் மும்பை செல்லும் லோகமான்ய திலக் விரைவு ரயில் நின்று கொண்டு இருந்தது.
திடீரென்று மர்ம கும்பல் ஒன்று அந்த ரயிலுக்கு தீ வைத்தது. இதில் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து நாசமானதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Wed, 29 Oct 2008 (01:46 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (01:45 IST)