தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை தமிழகம் உட்பட நாட்டின் தென்மாநிலங்களில் நேற்று வழக்கமான உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை தீபாவளிக்கு மறுநாள் நோன்பு எனப்படும் சடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால், வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உட்பட தலைவர்கள் பலர் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.