ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் கிஸ்-புல்-முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப்படையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப்படையினரும் சுட்டனர்.
இதில், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 4 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது.