Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை அதிபரின் தூதர் இந்தியா வருகை: பிரதமரை சந்திக்கிறார்!

இலங்கை அதிபரின் தூதர் இந்தியா வருகை: பிரதமரை சந்திக்கிறார்!
, ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (04:19 IST)
இலங்கையில் தமிழர்களின் மீதான தாக்குதல் குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் தூதர், பஸில் ராஜபக்சே நேற்றிரவு இந்தியா வந்தார்.

விடுதலைப்புலிகள் வசமுள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிரமாகச் சண்டையிட்டு வருவதால், அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து தில்லியில் இன்று உயர்நிலைப் பேச்சு நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் மகிந்தா ராஜபசேவின் சிறப்பு ஆலோசகரும், அவருடைய சகோதரருமான பாஸில் ராஜபக்சே நேற்று இந்தியா வந்தார். பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை இன்று சந்தித்துப் பேசும் பஸில் ராஜபக்சே, இலங்கையில் நடைபெறும் போர் மற்றும் தமிழர்களின் நிலை குறித்து அதிபர் ராஜபக்சே வழங்கிய கடிதத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், போர் நடைபெறும் இடங்களில் உள்ள பொது மக்களை பாதுகாப்பதற்காக சிறிலங்கா ராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்குவார் எனத் தெரிகிறது.

இதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவு செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோரையும் சந்தித்துப் பேச பஸில் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா ராணுவம் தொடர் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கக் கோரி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க.வின் வலியுறுத்தலின் பேரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் எதிரொலியாக இலங்கை அதிபரின் தூதர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil