Publish Date: Fri, 24 Oct 2008 (17:02 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (17:01 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க தீவிரவாதியை கிராம பாதுகாப்பு குழுவினர் (VDC) சுட்டுக்கொன்றனர்.
ஹதால் என்ற கிராமத்தில் உள்ளூர் பஞ்சாயத்து கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நுழைந்த தீவிரவாதிகளுக்கும், கிராம பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இந்த மோதலில் இர்ஷாத் அகமது மாலிக் என்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க தீவிரவாதி கொல்லப்பட்டான். தாக்குதலில் ஈடுபட்ட மேலும் 2 தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
மேலும், இந்த மோதலில் கிராம தலைவர் முகமது யூசுப் என்பவர் நிகழ்விடத்திலேயே பலியானார் மற்றும் ஹசிம் டின் என்பவர் காயமடைந்தார்.
பலியான தீவிரவாதியிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு தப்பி ஓடிய மற்ற 2 தீவிராவாதிகளையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Fri, 24 Oct 2008 (17:02 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (17:01 IST)