மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலேகான் என்ற இடத்தில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாசிக் மாவட்டம் மலேகானில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியானார்கள். இதேபோல் குஜராத் மாநிலம் மோடாசாவில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார்.
இந்த 2 குண்டு வெடிப்புகளும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் ஏற்பட்டது.
இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக மலேகான் பகுதியில் 3 பேரை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக காவல்துறை இணை ஆணையர் ஹெமண்ட் கர்கரே தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் விவரம் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரும் நாசிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.