Publish Date: Fri, 24 Oct 2008 (01:37 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (01:36 IST)
நாட்டின் மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை சரிபாதி அளவை எட்ட உள்ளதாக குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஷில்லாங்கில் உள்ள லபான் பெங்காலி மகளிர் உயர்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றுப் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், பெண்களுக்கு கல்வி, மேம்பாடு அளிக்காத எந்த நாடும் முன்னேற முடியாது என்றார்.
ஒரு பெண் கல்வியறிவு பெற்றால், அதன் மூலம் நாட்டில் நடைபெறும் சமூக அவலங்களை தடுப்பதுடன், போதை, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளைய சமுதாயத்தினரையும் சீர்திருத்த முடியும் என்றும் பிரதீபா குறிப்பிட்டார்.
Webdunia
Publish Date: Fri, 24 Oct 2008 (01:37 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (01:36 IST)