மகாராஷ்டிரா நவ நிர்மாண சேனா தொண்டர்கள் 5 பேர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து மராட்டிய மாநிலம் மாலேகானில் அனைத்துக் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு கடைபிடிக்கப்படுகிறது.
ரத்னகிரியில், மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க் கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி பிரயோகம் நடத்தினர். இதில், அந்த இயக்கத் தொண்டர்கள் சுனில் கெய்க்வாட், சுரேஷ் கவாலி உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து நேற்றிரவு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி மாலேகான் பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.