இந்திய கடல்எல்லையில் அத்துமீறி நுழைந்து முறைகேடாக மீன் பிடித்த குற்றத்திற்காக வங்கதேசத்தைச் சேர்ந்த 17 மீனவர்களை இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஒரிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில், வங்காளவிரிகுடா கடலில் சுமார் 35 நாட்டிகல் மைல் தூரத்துக்கு அத்துமீறி நுழைந்த 17 வங்கதேச மீனவர்கள் அப்பகுதியில் முறைகேடாக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஹால்டியா, கடற்படை உதவி படைத்தலைவர் பி.எஸ். டோமர் தலைமையில் சென்ற அதிகாரிகள் படகை வழிமறித்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மீன்பிடி படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், காவல்துறையினர் கைது செய்யப்பட்ட 17 வங்கதேச மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.