மகாராஷ்டிர அரசு வழங்கும் பாதுகாப்பு எனக்குத் தேவையில்லை, என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்குத் தெரியும் என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர அரசின் சார்பில் ராஜ்தாக்கரேவுக்கு இதுவரை வழங்கப்பட்ட “இசட்” பிரிவு பாதுகாப்பு, தற்போது “ஒய்” பிரிவு பாதுகாப்பாக தரம் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலைக் கேட்ட பின்னர் ராஜ்தாக்கரே இவ்வாறு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ராஜ்தாக்கரேவுக்கு அம்மாநில அரசு வழங்கிய “இசட்” பிரிவு பாதுகாப்பில், 4 துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரும், ஒரு அலுவலரும் அவருக்கு உடனிருந்து பாதுகாப்பு வழங்கி வந்தனர். ஆனால் தற்போது “ஒய்” பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.