ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு தயாரிப்பாளர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பரத்பூர் மாவட்டத்தின் தீக் நகர்ப் பகுதியில் உள்ள தருபுதாவில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர் வீட்டில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வீட்டில் இருந்த பட்டாசுகளும் வெடித்தால் வீடி இடிந்ததாகவும், அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் காயமடைந்த 14 பேர் தீக் நகர மருத்துவமனைகளில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தீக் மருத்துவமனை வட்டாரங்கள் யு.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக அளித்த தகவலின்படி, வெடி விபத்து காரணமாக இடிந்த விழுந்த வீட்டிற்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.