Publish Date: Wed, 22 Oct 2008 (18:29 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (18:29 IST)
மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை-கலவரத்தில் 3 பேர் பலியானார்கள். கலவரம் தொடர்பாக 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தானே மாவட்டம் கல்யாண் என்ற இடத்தில் உள்ள பைசோலி கிராமத்தில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கும் ராஜ்தாக்கரே ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்றிரவு திடீர் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிகொண்டனர். இதில் ஓம்பிரகாஷ் துபே, மயூர் துபே, உள்ளூர் எம்.என்.எஸ். தலைவர் ஒருரின் சகோதரர் குருநாத் ஆகிய 3பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் இந்த கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக 170 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Webdunia
Publish Date: Wed, 22 Oct 2008 (18:29 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (18:29 IST)