Publish Date: Wed, 22 Oct 2008 (18:08 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (18:08 IST)
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 24 பேர் உயிரிழந்தனர்.
புல் அறுப்பதற்காக பெண்களை ஆற்றின் மறுகரைக்கு ஏற்றிச் சென்ற போது, பஸ்ராஹா காவல் எல்லையில் துதேலா கிராமத்தில் ஆற்றின் நடுவே படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் துதேலா மற்றும் புத்நகர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Wed, 22 Oct 2008 (18:08 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (18:08 IST)