Publish Date: Wed, 22 Oct 2008 (03:47 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (03:46 IST)
ஜம்மு-காஷ்மீர், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 17ஆம் தேதியும், 7வது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் டிசம்பர் 28ஆம் தேதியும் நடக்கிறது. அனைத்து தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 28ஆம் தேதி ஒரே சமயத்தில் எண்ணப்படுகிறது.
இதேபோல் சட்டீஸ்கரில் நவம்பர் 14, 21ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாகவும், மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 29ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க. தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Wed, 22 Oct 2008 (03:47 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (03:46 IST)