மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் 2 வார காலம் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட மகாராஷ்டிர நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.என்றாலும் அவரை கல்யாண் நீதிமன்றத்தில் வேறொரு வழக்கிற்காக காவல்துறையினர் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.
15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட நிலையில், ராஜ் தாக்கரே சார்பில் அவரது வழக்கறிஞர் பிணை விடுதலை மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து 15 ஆயிரம் சொந்த ஜாமீனில் விடுவிக்க பாந்த்ரா நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து ராஜ் தாக்கரேக்கு எதிரான இதே குற்றச்சாட்டின் பேரில் கல்யாண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.