Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்என்எஸ் தாக்குதலில் பீகார் மாணவன் பலி!

எம்என்எஸ் தாக்குதலில் பீகார் மாணவன் பலி!
, செவ்வாய், 21 அக்டோபர் 2008 (14:07 IST)
மும்பையில் கடந்த ஞாயிறன்று, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) அமைப்பைச் சேர்ந்த சிலர் நடத்திய தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பீகார் நாலந்தா பல்கலைக்கழக மாணவர் பவன்குமார் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பாட்னா உட்பட சில நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே வாரியத் தேர்வுக்காக வந்த வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீது எம்என்எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் தாக்குதல் நடத்தினர். அப்போது பீகாரைச் சேர்ந்த பவன்குமார் என்ற மாணவரும் தாக்குதலுக்கு உள்ளானார்.

மும்பையில் நடத்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் நாலந்தா மாவட்டம் நர்ஸாரை காவல் எல்லையில் அடங்கிய பாரா-குண்ட் கிராமத்தைச் சேர்ந்த பவன்குமாரும் பலத்த காயம் அடைந்தார். இதில் பவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று பாட்னா ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பவன்குமார் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான மாணவர்கள் உடலை பெறுவதற்காக கூடியிருந்தனர்.

கூடியிருந்த மாணவர்கள் அனைவரும் ராஜ்தாக்கரே-க்கு எதிராக கொலைவழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ராஜ்தாக்கரே-வை மகாராஷ்டிராவிற்கு வெளியே கொண்டுவருமாறும் மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

மும்பையில் நடைபெற்ற தாக்குதலின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பவன்குமார் உயிரிழந்ததாக நேற்ரு மும்பை காவல்துறையினர், பவன்குமாரின் தந்தையிடம் தெரிவித்தனர்.

பவன்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil