Publish Date: Tue, 21 Oct 2008 (03:52 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (03:52 IST)
ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவைப் ஏற்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரேவை மும்பை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.
இன்று அவர் பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வட இந்தியர்கள் கொண்டாடும் சஹாத் (Chhath) பண்டிகை குறித்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி மனதைப் புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்த ராஜ்தாக்கரேவுக்கு எதிராக வழக்கறிஞர் அமித்குமார் என்பவர் ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ராஜ்தாக்கரேவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்கும்படி ராஜ்தாக்கரே ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையினர் நேற்று நள்ளிரவு ராஜ்தாக்கரேவை கைது செய்துள்ளனர்.
Webdunia
Publish Date: Tue, 21 Oct 2008 (03:52 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (03:52 IST)