இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003 நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை, பாகிஸ்தான் 58 முறை மீறியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய மக்களவை நடவடிக்கையின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கடந்த 2008 ஜனவரி இருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்திய எல்லையில் உள்ள ராணுவ நிலைகளின் மீது பாகிஸ்தான் 34 முறை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது என்றார்.
இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக, இப்பிரச்சனை குறித்து அந்நாட்டு அரசுடனான கொடி சந்திப்புகள் மற்றும் தலைமை ராணுவ அதிகாரிகள் சந்திப்பின் போது இந்தியா சார்பில் வலியுறுத்தப்படுவதாகவும் அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.