Publish Date: Mon, 20 Oct 2008 (17:06 IST)
Updated Date: Mon, 20 Oct 2008 (17:05 IST)
சண்டிகர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபைத் தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 39 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு வரும் 27ம் தேதி கடைசி நாளாகும்.
மனுக்கள் பரிசீலனை 29ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கு கடைசி நாள் இம்மாதம் 31ம் தேதியாகும் என்று சண்டிகர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14ம் தேதி முதல்கட்டமாக 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
எஞ்சியுள்ள 51 தொகுதிகளில் அடுத்த மாதம் (நவம்பர்) 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அலோக் சுக்லா தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உரிய கண்காணிப்புடன் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Webdunia
Publish Date: Mon, 20 Oct 2008 (17:06 IST)
Updated Date: Mon, 20 Oct 2008 (17:05 IST)