டெல்லியில் உள்ள கரம்பாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த இன்சூரன்ஸ் அலுலவகத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்து ஏற்பட்டது குறித்து இன்று காலை 5.30 மணிக்கு தகவல் வந்ததையடுத்து 20-க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வாகனங்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தன. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் உயிர்சேதம் எதும் ஏற்படவில்லை என்றும் சேதவிவரங்கள் பற்றிய தகவல் முழுமையாக இன்னும் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.