Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திராயன்-1: திங்களன்று கவுன்ட்-டவுன் துவக்கம்!

சந்திராயன்-1: திங்களன்று கவுன்ட்-டவுன் துவக்கம்!
, சனி, 18 அக்டோபர் 2008 (19:03 IST)
நிலவு குறித்த ஆய்வை மேற்கொள்வதற்காக இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன்-1 ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்-டவுன் திங்களன்று துவங்கும் என இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தின் இணை இயக்குனர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் கூறுகையில், சந்திராயன்-1 விண்கலத்திற்கான கவுன்ட்-டவுன் திங்களன்று அதிகாலை துவங்கும். இதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் நடந்து வருகிறது.

கவுன்ட்-டவுன் காலத்தின் போது சுமார் 42 டன் எரிபொருள் நிரப்பப்பட உள்ளதாகவும், வரும் 22ஆம் தேதி அதிகாலை 6.20 மணிக்கு ஏவப்பட உள்ள சந்திராயன்-1 விண்கலத்தின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் முறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நிலவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியா அனுப்பு முதல் ஆளில்லா விண்கலமான சந்திராயன்-1, சுமார் 1,380 கிலோ எடையுள்ள 11 ஆய்வு உபகரணங்களையும் சுமந்து செல்லும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil