Publish Date: Sat, 18 Oct 2008 (17:14 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
லேட்ஹர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் சுரேஷ் யாதவ் என்பவரது வீட்டை மாவோயிஸ்டுகள் தீவைத்து எரித்தனர்.
லேட்ஹர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் புகுந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதோடு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுரேஷ் யாதவின் காரையும், வீட்டையும் தீவைத்து எரித்தனர்.
அப்போது சுரேஷ் யாதவ் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
பின்னர் அங்கிருந்து சென்ற மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதியில் வசித்து வந்த கிராம மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் காயமடைந்தனர்.