Publish Date: Sat, 18 Oct 2008 (12:28 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
சத்ரா: ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிலிருந்து பிரிந்து சென்ற திரிதிய பிரஸ்துதி கமிட்டி (TPC) இயக்கத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி பனிப்போர் ஏற்பட்டு வரும் வேளையில், நேற்றிரவு பருதுவா கிராமத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் துப்பாக்கியால் மாறி, மாறி சுட்டுக்கொண்டனர்.
இந்த மோதலில் மாவோயிஸ்ட் இயக்க தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து மோதல் நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.