Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஞ்சல் அலுவலகங்களில் தங்க காசு விற்பனை துவ‌க்க‌ம்!

அஞ்சல் அலுவலகங்களில் தங்க காசு விற்பனை துவ‌க்க‌ம்!
, புதன், 15 அக்டோபர் 2008 (17:09 IST)
அஞ்சல் அலுவலகங்களில் 24 கார‌டதங்க காசு விற்பனை செ‌ய்‌யு‌ம் ‌தி‌ட்ட‌த்தமத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா இ‌ன்றதுவக்கி வைத்தார்.

இ‌த்‌திட்டம் முதல்கட்டமாக தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, குஜரா‌தஆகிய மாநிலங்களில் இன்று துவங்கப்பட்டது. இ‌ந்த‌ங்காசஅரை கிராம், 1 ‌கிரா‌ம், 5‌, 8 கிராம் போ‌ன்ற எடைகளில் கிடைக்கும். இவை 24 காரட் தரத்துடன் கூடியவை.

சுவிட்சர்லாந்தின் 'வல்காம்பி' (Valcambi) நிறுவனத்தின் தரச்சான்றுடன் இந்த காசுகள் 'பேக்' செய்து முத்திரையிடப்பட்டிருக்கும். சர்வதேச தரம், தரமான பேக்கேஜ், போலி அபாயம் இல்லாதது, முறையான மதிப்பீட்டுச் சான்று ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகு‌ம்.

உலக தங்க கவுன்சில், ரிலையன்ஸ் மணி நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தை இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் தயாராகும் 24 காரட் தங்க காசுகளை ரிலையன்ஸ் நிறுவனம் சப்ளை செய்யும். இதை சந்தைப்படுத்த உலக தங்க கவுன்சில் உதவி செய்யும். இந்த தங்க காசுகளை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மக்கள் வாங்கிக் கொள்ளலாம்.

அஞ்சல் அலுவலகங்களில் தங்க காசு விற்கும் இந்தத் திட்டம் தமிழ்நாடு, டெ‌ல்‌லி, மகாராஷ்டிரா, குஜரா‌த் ஆகிய மாநிலங்களில் சோதனை அடிப்படையில் இன்று துவங்கப்பட்டது. ம‌க்க‌ளிட‌ம் ‌கிடை‌க்கு‌ம் வரவே‌ற்பை பொறு‌த்து இ‌த்‌தி‌ட்ட‌ம் ம‌ற்ற மா‌‌நில‌ங்களு‌க்கு‌ம் ‌வி‌ரிவு‌ப்படு‌த்த‌ப்படு‌ம்.

டெ‌ல்‌லி‌‌யி‌ல் நடந்த இ‌ந்‌நிக‌ழ்‌‌ச்‌சி‌யி‌ல் ‌தி‌ட்ட‌த்தை தொட‌ங்‌கி வை‌த்து‌ப் பே‌சிய அமை‌ச்ச‌ர் ராசா, மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை, நாணயம் வாய்ந்த இந்திய அஞ்சல் துறை மூலமாக தங்க காசுகள் விற்கப்படவுள்ளன. அஞ்சல் சேவைகளை வழங்குவதோடு தகவல் தொடர்பு, சில்லறை வியாபாரம், விநியோகம் ஆகிய சேவைகளையும் அஞ்சல் துறை வாயிலாக வழங்கி இந்த நெட்வொர்க்கை விரிவுபடுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது தங்க காசு விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

சாமானிய மக்களும் இந்த த‌ங்க காசு ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் பய‌ன்பெறு‌ம் வகை‌யி‌ல் கிராமப் பகுதியில் இருக்கும் அஞ்சல் அலுவலகங்களிலும் தடையின்றி கிடைக்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இத்திட்டத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பொருத்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்திய அஞ்சல் துறையின் அடையாளச் சின்னத்துடன் கூடிய தங்கக் காசு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

நிகழ்ச்சியில் பே‌சிய தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா, அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பல்வேறு பொருட்கள், சேவைகள் வழங்கப்பட உள்ளன எ‌ன்று‌ம் அதன் முன்னோடியாக தங்க காசு விற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil