மணிப்பூர் மாநிலத்தில் 'மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணி' (MPLF) அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1 மணிக்கு துவங்கிய இந்த முழு அடைப்பு போராட்டம் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், கடைகள் மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பந்த் காரணமாக அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்காக மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.