Newsworld News National 0810 15 1081015007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேன் புக்கர் விருது இந்திய எழுத்தாளருக்கு!

Advertiesment
மேன் புக்கர் விருது Man Booker Prize The White Tiger
, புதன், 15 அக்டோபர் 2008 (03:46 IST)
மதிப்பு மிக்க மேன் புக்கர் விருது (Man Booker Prize) இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடிகாவிற்கு அவரது முதல் புதினமான "தி ஒயிட் டைகர்" (The White Tiger) என்ற நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதின் மூலம் அடிகாவிற்கு 50,000 பவுண்டுகள் அல்லது 87,000 அமெரிக்க டாலர்கள் ரொக்கப்பரிசு கிடைத்துள்ளது.

வறுமையான கிராமத்தை விட்டு வெளியேறி பெரு நகரத்தில் தன் வாழ்க்கையில் வெற்றியடைய சகல விதமான வேலைகளையும் செய்யும் ஒரு கதை நாயகன் பற்றியது இந்த நாவல்.

இந்த விருதை தனது 34-வது வயதிலேயே பெற்று அடிகா சாதனை புரிந்துள்ளார்.

மும்பையில் வசிக்கும் அரவிந்த் அடிகாவின் இந்த நாவல் மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன, குறிப்பாக நவீன இந்தியாவைப் பற்றி எதிர்மறையான சித்திரத்தை அவர் இந்த புதினத்தில் வழங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

Share this Story:

Follow Webdunia tamil