Publish Date: Tue, 14 Oct 2008 (16:29 IST)
Updated Date: Tue, 14 Oct 2008 (16:28 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தான் தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
பூஞ்ச் மாவட்டம், காஞ்சி போஸ்ட் சர்வதேச எல்லையொட்டிய பகுதியில் சில தீவிரவாத கும்பல் நேற்றிரவு ஊடுருவ முயற்சித்தது. இதையடுத்து படையினர் உஷாராகி அவர்களை நோக்கி முன்னேறினர். அப்போது தீவிரவாதிகள் சரமாரியாக சுடத்தொடங்கினர்.
இதனையடுத்து, இந்திய படையினரும் பதிலுக்கு திருப்பி சுட்டனர். நேற்றிரவு நடந்த இந்த மோதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்திய படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மற்ற தீவிரவாதிகள் மீண்டும் பாகிஸ்தானுக்குள்ளேயே ஓடிவிட்டதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 5 நாட்களில் நடந்துள்ள 4-வது ஊடுருவல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Tue, 14 Oct 2008 (16:29 IST)
Updated Date: Tue, 14 Oct 2008 (16:28 IST)