Publish Date: Tue, 14 Oct 2008 (14:22 IST)
Updated Date: Tue, 14 Oct 2008 (14:22 IST)
இருதயக் கோளாறு காரணமாக புதுடெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் சிகிச்சை பெறும், மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷியை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று காலை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார்.
மருத்துவமனையில் சுமார் 10 நிமிடம் இருந்த பிரதீபா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் டி.கே. சர்மாவிடம் தாஸ்முன்ஷியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் தாஸ்முன்ஷியின் குடும்பத்தினரிடமும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தார்.
இதற்கிடையே தாஸ்முன்ஷியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தாஸ்முன்ஷி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.