இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு (சிமி) மத்திய அரசு தடை விதித்ததை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிமி இயக்கத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டில் மத்திய அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து அந்த அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கடந்த ஆக.5-ம் தேதி சிமிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை எஸ்.பி.சின்ஹா மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோரை கொண்ட 2 நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்து வந்தது. தற்போது 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சிடம் இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.