Publish Date: Mon, 13 Oct 2008 (15:20 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (15:15 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியை ராணுவத்தினர் இன்று சுட்டுக்கொன்றனர்.
நந்தானி என்ற இடத்தில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தினரும், காவல்துறையினரும் கூட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் துணை பிரிவு தளபதி முகமது ஹனிப் பட் என்ற இர்பான் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்த தீவிரவாதி கடந்த 1994ஆம் ஆண்டு முதல் ஜம்மு பகுதியில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.