Newsworld News National 0810 13 1081013007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எய்ம்ஸ் மருத்துவமனையில் தாஸ்முன்ஷி அனுமதி!

Advertiesment
புதுடெல்லி அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி எய்ம்ஸ் மருத்துவமனை
, திங்கள், 13 அக்டோபர் 2008 (11:10 IST)
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, உடல்நலமின்மை காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருதயக் கோளாறு காரணமாக அவதிப்பட்ட அமைச்சர் தாஸ்முன்ஷி, இன்று அதிகாலை 2.30 மணியளவில் மருத்துவமனைக்கு அழை‌த்து வரப்பட்டதாகவும், தற்போது அவர் இருதய சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
PTI PhotoFILE

அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், சுவாசக் கோளாறும் இருந்ததால் அவருக்கு பிராணவாயு மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே முன்ஷியின் இடதுபக்க இருதயம் முற்றிலுமாக செயலிழந்து விட்டதால் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil