ஜம்மு- காஷ்மீர் மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தலை அடுத்த மாதம் 3 முதல் 4 கட்டங்களாக நடத்தி முடிக்கத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், "அந்த மாநிலத் தேர்தலை 3 முதல் 4 கட்டங்களாக அடுத்த மாதம் நடத்தி முடிக்கத் தயாராக உள்ளோம். தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளன." என்று கூறியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலைச் சீர்குலைக்க விரும்பும் சில அன்னிய சக்திகள், நாள்தோறும் எல்லையைத் தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்று வருகின்றன, அவற்றிற்கு எதிராக நமது படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர் என்று பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.