Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மி‌ன்னணு மணியார்டர் சேவை இன்று துவக்கம்!

‌மி‌ன்னணு மணியார்டர் சேவை இன்று துவக்கம்!
, வெள்ளி, 10 அக்டோபர் 2008 (18:31 IST)
நாடு முழுவதும் ‌மி‌ன்னணு மணியார்டர் சேவை இன்று துவங்கப்பட்டது. நாட்டில் உ‌ள்ள 2,500 அஞ்சல் அலுவலகங்களில் இந்த சேவை இன்றே துவக்கப்பட்டது.

நாட்டின் எந்த மூலையில் இருந்தும் எந்த இடத்துக்கும் பணம் அனுப்பும் சிறந்த சேவையாக அஞ்சல் துறையின் 'மணியார்டர்' சேவை விளங்கி வருகிறது.

அஞ்சல் அலுவலகங்களை நவீனப்படுத்தி பொதுமக்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கும் சேவை மையமாக அஞ்சல் அலுவலகங்களை மாற்ற மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக ‌மி‌ன்னணு முறையில் பணம் அனுப்பும் 'இ-மணியார்டர்' (இ.எம்.ஓ) சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக டெ‌ல்‌லி, பெங்களூரூ, மைசூர், திருச்சி, இந்தூர் ஆகிய இடங்களில் உ‌ள்ள தலைமை அலுவலகங்களில் கணினி மென்பொருளை பயன்படுத்தி இந்த சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 2,500 அஞ்சல் அலுவலகங்களில் இந்த சேவை இன்று துவங்கப்பட்டுள்ளது. மற்ற அலுவலங்களுக்கும் இந்த வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

'இ.எம்.ஓ' சேவை வசதியுள்ள அஞ்சல் அலுவலகத்தில் இருந்து இந்த வசதியுள்ள எந்த அஞ்சல் அலுவலகத்துக்கு‌ம் இனி இ.எம்.ஓ அனுப்பலாம். இந்த வசதியில்லாத உதவி அஞ்சலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களுக்கு தலைமை அஞ்சலகத்தின் மூலம் பெறப்பட்டு அனுப்பப்படும்.

மி‌ன்னணு முறையில் அனுப்பப்படுவதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. வழக்கமான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். ‌மி‌ன்னணு முறை அல்லாத சாதாரண மணியார்டர் சேவையும் தொடர்ந்து செயல்படும்.

Share this Story:

Follow Webdunia tamil