ஜம்மு- காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் புத்வாரா என்ற கிராமம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரித்தபோது, அவர் பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
சுமார் 22 வயதான அகமது சாட்டா என்ற அந்த இளைஞரிடம் இருந்து சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இருந்தாலும், அவர் ஏன் இந்தியாவிற்குள் நுழைந்தார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது என்று படையினர் தெரிவித்துள்ளனர்.
அகமது சாட்டா சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டி 25 மீட்டர் தூரத்திற்கு இந்திய எல்லைக்குள் வந்துள்ளார்.