தலாய் லாமாவுக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை!
, வெள்ளி, 10 அக்டோபர் 2008 (13:52 IST)
புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நோபல் பரிசு பெற்றவரான தலாய் லாமா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் புதுடெல்லிக்கு வந்தார். அவருக்கு அடிவயிற்றில் தொடர்ந்து வலி இருந்ததால் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது.
இதில் அவரது பித்தப்பையில் கல் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இன்று அவருக்கு லேப்ராஸ்கோபி முறையில் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக திபெத் அரசின் செய்தித் தொடர்பாளர் டென்சின் தக்லா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பை லீலாவதி மருத்துவமனையில் தலாய் லாமா சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.