பஜ்ரங் தளத்தைத் தடை செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவ்வமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
ஒரிசா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ள கிறித்தவர்கள் மீதான தாக்குதல்களை அடுத்து, அவற்றில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பஜ்ரங் தளம் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று அரசிற்குப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், "பஜ்ரங் தளத்தைத் தடை செய்தால் மத்திய அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று" பஜ்ரங் தளம் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
"தடை விதிக்கப்பட்டால் அதை எதிர்த்துப் போராடுவோம். நீதி கேட்டு மக்களிடம் செல்வோம். விரைவில் நடக்கவுள்ள தேர்தலில் அரசிற்கு எங்களின் பலத்தை நிரூபிப்போம்" என்றார் அவர்.