குஜராத் மாநிலம் வடோதராவில் 3 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்தனர்.
வடோதராவில் ஹடிகானா என்ற பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகப் பொது மக்கள் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் நடத்திய ஆய்வில், குப்பைக்குள் 3 வெடிகுண்டுகளும், வெடி மருந்தும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தைக் கண்டுபிடித்து, அவற்றை உடனடியாகச் செயலிழக்கச் செய்தனர்.
வெடிகுண்டுகளைப் பதுக்கியவர்கள் யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாக காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்தார்.