கேரளத்தில் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
2007 டிசம்பரில் கோட்டயம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள வாகமோன் என்ற இடத்தில் நடந்த சிமி பயிற்சி முகாம் தொடர்பாக அப்துல் ஹக்கிம், ஷமீர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் கேரள காவல்துறை தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த டி.ஐ.ஜி. வினோத் குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்குப் பிறகே குற்றம்சாற்றப்பட்டுள்ளோர் விவரங்களைத் தெரிவிக்க இயலும் என்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஏற்கெனவே, 2006 ஆகஸ்ட்டில் அலுவா அருகில் உள்ள பினானி புரத்தில் நடந்த சிமி கூட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.