மணிப்பூர் மாநிலம், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) சட்டமன்ற உறுப்பினர் வீடு மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
எனினும், இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கோங்பல் சனம் லேயிகை என்னுமிடத்தில் உள்ளது சட்டமன்ற உறுப்பினர் நந்த கிஷோர் வீடு. இந்த வீட்டில் தீவிரவாதிகள் சிலர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் சுற்றுச் சுவர் தரைமட்டமானது.
குண்டு வெடித்த போது நந்த கிஷோர் வீட்டில் இல்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த குண்டு வெடிப்பு பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.