கர்நாடகாவில் நானோ கார் தொழிற்சாலை துவங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
நானோ கார் தொழிற்சாலையைக் கர்நாடகத்திற்கு மாற்றும் வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு இன்று கர்நாடகம் வந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி காந்த் மற்றும் மூத்த அதிகாரிகள் பெங்களூருவில் கர்நாடக மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர், இரட்டை நகரங்களான ஹூப்ளி, தார்வாடில் உள்ள 3 இடங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்கத்தில் நானோ கார் ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சிங்கூரிலிருந்து நானோர் கார் ஆலை வெளியேறியது.
இந்நிலையில் கர்நாடகாவில் நானோ கார் ஆலையை நிறுவுமாறு டாடா நிறுவனத்துத்துக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்தது. ஆலைக்கு தேவையான நிலம் உள்பட பல சலுகைகளையும் தர முன்வந்துள்ளது.